Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிரத்னம் படத்துக்கு முன்பாகவே ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்!

Advertiesment
மணிரத்னம் படத்துக்கு முன்பாகவே ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்!
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:46 IST)
இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின.

நடிகராக, தயாரிப்பாளராக, கவிஞராக, பாடகராக, இயக்குனராக, அரசியல்வாதியாக இன்னும் பலவாக தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளமாக இருப்பவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் ‘விக்ரம்’ வரை ஏராளமான படங்களை நடித்துள்ளதுடன், கோலிவுட்டை மற்ற மொழி திரையுலகம் வியந்து பார்க்கும் வகையிலான பரிசோதனை முயற்சிகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் 68 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்புக்கு  முன்புவரை ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் அறிவிப்புதான் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது கமல் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகும் படம் மணிரத்னம் படத்துக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும் என்றும், அதன் பின்னர்தான் மணிரத்னம் படம் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேள்பாரி படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது இவரா? திடீர் முடிவை எடுத்த ஷங்கர்