Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’நாயகன்’ மீண்டும் வறார்.. சோசியல் மீடியாவை பிஸியாக்கிய ஆண்டவர்!

Advertiesment
Kamal
, திங்கள், 7 நவம்பர் 2022 (08:37 IST)
இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

நடிகராக, தயாரிப்பாளராக, கவிஞராக, பாடகராக, இயக்குனராக, அரசியல்வாதியாக இன்னும் பலவாக தமிழ் சினிமாவின் முக்கியமான அடையாளமாக இருப்பவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் ‘விக்ரம்’ வரை ஏராளமான படங்களை நடித்துள்ளதுடன், கோலிவுட்டை மற்ற மொழி திரையுலகம் வியந்து பார்க்கும் வகையிலான பரிசோதனை முயற்சிகளையும் செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியல் காரணமாக படம் நடிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன் சமீபத்தில் நடித்த ‘விக்ரம்’ உலக அளவில் பெரும் ஹிட் அடித்துள்ளது. அதை தொடர்ந்து ‘விக்ரம் 3’ ’இந்தியன் 2’, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பட அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.

இன்று உலக நாயகன் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள், தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் கமல்ஹாசன் குறித்தும், அவரது படங்கள் குறித்து சிறப்பு வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு #HappyBirthdayUlaganayagan #HBDKamalHaasan உள்ளிட்ட ஹேஷ்டேகுகளையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Edited By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டுவிட்டருக்கு கட்டணம் வசூலிப்பது சரிதான்: கங்கனா ரனாவத்