Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“ஆரம்பத்தில் இது எனது தனிப்பட்ட கதை… இப்போது உலக இசை ரசிகர்களுக்கு…” -பயோபிக் குறித்து இளையராஜா நெகிழ்ச்சி

Advertiesment
“ஆரம்பத்தில் இது எனது தனிப்பட்ட கதை… இப்போது உலக இசை ரசிகர்களுக்கு…” -பயோபிக் குறித்து இளையராஜா நெகிழ்ச்சி

vinoth

, வியாழன், 21 மார்ச் 2024 (06:59 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியாவோடு தயாரிக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் தொடக்க விழாவில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த பட அறிவிப்பு கோடிக்கணக்கான இளையராஜா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் குறித்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இளையராஜா.

அந்த பதிவில் “ தொடக்கத்தில், இது எனது தனிப்பட்ட பயணமாக இருந்தது. இப்போது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கான நெஞ்சை தொடும் ஒரு கதையாக மாறப்போகிறது.  இந்த படம் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவையும் வாழ்த்துகிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண்- ஷங்கருக்கு சம்பளம் இல்லையா?