கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம்சரண் மற்றும் ஷங்கர் ஆகிய இருவருக்கும் சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் குவித்த நிலையில், இவரது அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது., அதிலும், இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்துக்குகதை எழுதியுள்ளதால் இந்தியா சினிமா இப்படத்தை எதிர்பார்த்துள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், சமீபத்திய தகவலின்படி, இந்த படத்தில் மூன்று நடிகர்கள் வில்லன்களாக நடிக்க உள்ளதாகவும், அதில், எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகிய மூவரும் இந்த படத்தின் பிரதான வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது
இந்த நிலையில், ஒரு புதிய தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி, கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம்சரண் மற்றும் ஷங்கர் ஆகிய இருவருக்கும் சம்பளம் பெறவில்லையாம்.
ஆனால், பிராஃபிட் சேர் தான் இருவரும் பேசியுள்ளனராம். அதன்படி, ராம்சரணுக்கும் ஷங்கருக்கும் படம் ரிலீஸான பிறகு வரும் லாபத்தில் 33 சதவீதம் வழங்கப்படும் எனவும், தில் ராஜூக்கு 34 சதவீதம் எடுத்துக்கொள்வார் என கூறப்படுகிறது.
ஆனால், ஷங்கருக்கு கூடுதலாக மாதம் மாதம் ரூ 50 லட்சம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதேசமயம் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. அதிக செலவு போன்றவற்றால் ஷங்கர் எப்படி பிராஃபிட் ஷேருக்கு ஒப்புக் கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.