இளையராஜா பயோபிக் படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரும் மார்ச் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக இளையராஜாவுடன் அருண் மாதேஸ்வரன் பயணம் மேற்கொண்டு அவரது அனுபவங்களையும் பழைய தகவல்களையும் சேகரித்து வருகிறார்..
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இளையராஜாவின் பயோபிக் படத்தை இயக்குவது அருண்மாதேஸ்வரன் என்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மும்பையைச் சேர்ந்த நிறுவனம் பிரபல கட்டுமானம் நிறுவனம், இளையராஜாவின் மீதுள்ள மரியாதையாலும், அவரது இசையமைப்பின் மீதான காதலாலும் இப்படத்தைத் தயாரிக்க, இதில் இளையராஜாவும் இணைந்திருப்பதாக தெரிகிறது.
அதன்படி இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரும் மார்ச் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் , சினிமாத்துறையினர் மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இது இளையராஜாவின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.