Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் வீட்டில் 100வது நாளில் நான் இருப்பேன்; சொன்னது யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் 100வது நாளில் நான் இருப்பேன்; சொன்னது யார் தெரியுமா?
, திங்கள், 25 செப்டம்பர் 2017 (16:13 IST)
பிக்பாஸ் வீட்டிற்குள் தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை ஓவியா. சமூகவலைத்தளங்களில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ஒரு ரசிகர் படையே உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு மக்கள் மத்தியில் தனக்கு உள்ள வரவேற்பைப் புரிந்துகொண்டார்.

 
ஓவியாவும் மக்கள் ஆதரவைப் பயன்படுத்தி தனக்கென்று மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். இந்நிலையில் சரவணா  ஸ்டோர்ஸ் புதிய கடை ஒன்றின் திறப்பு விழா இன்று நடந்தது. அந்த கடையை ஓவியா தான் திறந்து வைக்க சென்றார். அவரை  பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது. கடையை திறந்து வைத்த பிறகு மக்கள் மத்தியில் பேசுகையில் ‘உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி, இதற்கு நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.
 
பிக்பாஸ் வீட்டில் தான் பாடிய 'கொக்கு நெட்டக் கொக்கு.. பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இவ்வளவு அன்பு செலுத்தும் ரசிகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஒருவரை மட்டும் காதலிக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறார் ஓவியா. மேலும், நிச்சயம் ‘பிக்பாஸ் 100வது நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவேன்’ என்று கூறினார். இதனால் ரசிகர்கள்  உற்சாகத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதிக்கு ‘எமன்’ என்ற பெயர் ஏன்?