Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதிக்கு ‘எமன்’ என்ற பெயர் ஏன்?

விஜய் சேதுபதிக்கு ‘எமன்’ என்ற பெயர் ஏன்?
, திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:46 IST)
விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில், அவருக்கு ‘எமன்’ என்று பெயர் வைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.


 
 
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இந்தப் படத்தில், பழங்குடி மக்கள் தலைவனாக அவர் நடித்துள்ளார். படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ‘எமன்’. ஏன் அந்த பெயர் வைக்கப்பட்டது என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
 
பொதுவாக, மக்கள் தங்கள் குலதெய்வங்களின் பெயர்களைச் சுருக்கி தங்கள் பிள்ளைகளுக்கு வைப்பது வழக்கம். உதாரணமாக, கருப்பண்ணசாமி என்பதைச் சுருக்கி ‘கருப்பன்’ என வைப்பார்கள். அப்படி, பழங்குடி மக்களின் குலதெய்வமான எமதர்மராஜா என்பதைச் சுருக்கி ‘எமன்’ என வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“கமல்ஹாசனால் மட்டுமே அது முடியும்” – துல்கர் சல்மான்