முதலை மீது சவாரி செய்யும் ஓவியா வைரலாகும் புகைப்படம்

புதன், 20 செப்டம்பர் 2017 (11:23 IST)
களவாணி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்  பிடித்தவர் நடிகை ஓவியா. தற்போது நடிகை ஓவியா முதலை மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியப் பின்னர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காகவே எனது தலைமுடியை தானமாக வழங்கினார். மேலும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும், இனிமேல் தன்னை நிறைய  படங்களில் பார்க்கலாம் என்று கூறினார். மேலும் தான் சிங்கிள் என்றும் ட்விட்டர் பதிவு செய்திருந்தார். இவ்வாறாக தன் மனதிற்கு பிடித்ததை எல்லாம் செய்து வருகிறார்.
 
முதலை பார்க் ஒன்றில் ஓவியா முதலை மீது அமர்ந்து சிரிக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. பெரிய முதலை வாய் திறந்தபடி உள்ளது. ஓவியாவின் தைரியத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தலைவிடா என்று  பெருமையாக ட்வீட் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பெண்ணை மையப்படுத்திய கதையில் ஹீரோவாக நடிக்கும் வரலட்சுமி