Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் பாம்புக்கே அஞ்சுவதில்லை...சட்ட மன்றத் தேர்தலில்....சவால் விட்ட சிம்புவின் தந்தை !!!!

Advertiesment
நான் பாம்புக்கே அஞ்சுவதில்லை...சட்ட மன்றத் தேர்தலில்....சவால் விட்ட சிம்புவின் தந்தை !!!!
, சனி, 5 டிசம்பர் 2020 (16:57 IST)
சமீபத்தில் நடைபெற்ற  தயாரிப்பாளர் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றார். டி ஆர் ராஜேந்தர் தோல்வி அடைந்தார்.

ஆனால் டி.ஆர் புதிய தயாரிப்பாளர் சங்கத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கு ’தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ’எனப் பெயர் சூட்டியுள்ளார்.

இச்சங்கத்தை பதிவு செய்வதற்க்காக விண்ணபித்த ஆதாரமும் வெளியாகியுள்ளது. இன்று(5 ஆம் தேதி)   சங்கம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று தனது புதிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ராஜேந்தர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது நடவடிக்கைகளைப் பொருத்திருந்து பார்க்கும்படி சவால் விட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தனிச்சங்கம் அமைப்பதால் தயாரிப்பாளர்கள் ஒற்றுமை குலைக்கப்படுகிறது. தனிச்சங்கம் அமைத்துள்ள பாரதிராஜாவின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பீர்களா எனக் கேள்வி எழுப்பீர்களா?

மேலும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றுள்ளது குறித்துப்பேசிய அவர், எதிரணிக்கு பசும்பாலும், எங்களுக்குப் புட்டிபாலும் கொடுத்துவிட்டனர்.  நான் பாம்புக்கே அஞ்சுவதில்லை. இதில், எறும்புக்கும் , பல்லிக்குமா அஞ்சப் போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சங்கத்தில் ஜே.சுதிஸ்,சிங்கார வடிவேலன் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். மேலும் இந்தச் சங்கத்தின் நலனுக்கான சம்பளம் பெறாமல் சிம்பு ஒரு படம் நடித்துக்கொடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’ரூ. 1000 கோடி பட்ஜெட் ’’படங்களில் நடிக்கும் பாகுபலி ஹீரோ…சாதனையின் உச்சம் !!