திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள தோனிரேவு என்ற பகுதியில் வசித்து வருபவர்  நைனியப்பன். இவரது மகள் சீவரஞ்சினிக்கும் பிரவீன் குமார் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இருவர்கள் இருவரும் திருப்பாலைவனம் பகுதியில் ஒராண்டாக வசித்து வந்தனர். இந்நிலையில்  பிரவீன்குமார் தனது மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகத் தெரிகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் நேற்று முன் தினம் தனது மனைவியை பாம்பு கடித்து இறந்துவிட்டதாக பிரவீன் குமார் நைனியப்பனிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் போலீஸில், தன் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இதன்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
	இதில், தன் காதல்மனைவியைத் தலையணையை முகத்தில் அமுக்கிக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
 
									
			                     
							
							
			        							
								
																	தற்போது அவர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்த்கு சிறையில் அடைத்துள்ளனர்.