கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும். அதை பரப்பும் போக்கிரிகளை யாராயினும் தண்டிக்கபட வேண்டும் என நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. அதை மதிக்கத் தெரியாத போக்கிரிகள் யாராயினும் எவர்க்கெதியாராயினும் தண்டிக்கப்பாட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்! மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் நடராஜ் சுப்பிரமணி பதிவிட்டுள்ளதாவது :
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ...என்று பதிவிட்டுள்ளார்.