Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசுமைக்குடி தன்னார்வ அமைப்பினை சீர்குலைக்க சதி

பசுமைக்குடி தன்னார்வ அமைப்பினை சீர்குலைக்க சதி
, சனி, 11 ஜூலை 2020 (22:59 IST)
கரூர் அருகே பஞ்சாயத்து தலைவரை கொலை செய்ய முயற்சி மற்றும் பசுமைக்குடி தன்னார்வ அமைப்பினை சீர்குலைக்க சதி ! 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் தாலுக்கா, வரவணை பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருபவர் திரு.கந்தசாமி, இவர் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், பசுமைக்குடி தன்னார்வலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நரேந்திரன் கந்தசாமி என்பவருடைய தந்தையும் ஆவார், தான் பிறந்த ஊருக்கு ஏதேனும் நன்மை செய்யும் பொருட்டு, அமெரிக்காவில் கணினி தொழில் நுட்ப ஆலோசகராக பணியாற்றி வரும் நரேந்திரன் கந்தசாமி என்பவருடைய தீவிர முயற்சியால், இப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு அதை பராமரித்தும் வருகின்றார். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு வந்த இந்த நேரத்திலும் கூட நான்கு கட்ட நிவாரணமாக சுமார் ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அடிப்படை அத்யாவசிய மளிகை சாமான்கள் கொடுத்த இந்த சமூக நல அமைப்பின் தீவிர முயற்சியாக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் நீதிபதி மோகன்ராஜ் என்பவர் மூலம் இப்பகுதியில் பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் சமுதாய காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு சென்ற மாதம் வரை சுமார் மாதம் தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக காய்கறிகள் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக காய்கறிகளை விநியோகித்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பசுமைக்குடி தன்னார்வலர் அமைப்பின், சமுதாய காய்கறி தோட்டம் 127 நபர்களுக்கு சொந்தமானது என்று கூறி சுமார் 7 நபர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் மனுக்களாக போட்டு விட்டு, அதை ஒரு சில சமூக வலைதளங்களில் வரவணை பஞ்சாயத்து தலைவர் நிலத்தினை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில், பசுமைக்குடி தன்னார்வ அமைப்பினரே அந்த நிலத்தில் தங்களுக்கும் பங்கு இருந்தாலும் கூட, அந்த சமுதாய காய்கறி தோட்டத்தினை அகற்றி, ஊருக்கு எந்த வித கெடுதலும் நடைபெற கூடாது என்று அகற்றி விட்டனர். இந்நிலையில், பசுமைக்குடி தன்னாவலர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அமெரிக்காவில் வசிக்கும் நரேந்திரன் கந்தசாமிக்கும், வரவணை பஞ்சாயத்து தலைவர் கந்தசாமிக்கும் இடையே தந்தை மகன் உறவு மட்டுமே தவிர, பசுமைக்குடி தன்னார்வலர் அமைப்பில் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமிக்கும் எந்த வித பதவியும் கிடையாது, இந்த நிலையில், பஞ்சாயத்து தலைவரும், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான கந்தசாமியின் பெயர் களங்கம் ஏற்பட்டு விட்ட நிலையில், இன்று அதிகாலை மர்ம நபர்கள், வரவணை பஞ்சாயத்து தலைவரின் இல்லமான, அதே ஊராட்சிக்குட்பட்ட, வ.வேப்பங்குடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் அருகே உள்ள அவரது குடிசைக்கு தீ வைத்துள்ளனர். இதனால் ஊர் பொதுமக்களே தீயை அணைத்து விட்டு, சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்த நிலையில், தற்போது வரை அந்த ஊரில் பரபரப்பு நீடித்த நிலையில், கடவூர் வட்டாட்சியர் மைதிலி மற்றும் சிந்தாமணிப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், வரவணை பஞ்சாயத்து தலைவர் இல்லத்திற்கு அந்த ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு சமுதாய மக்கள் மற்றும் கரூர் மாவட்டத்தினை சார்ந்த சமூக நல ஆர்வலர்கள் ஆறுதல் கூறி வரும் நிலையில், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தவர் தான் இந்த தீயை வைத்திருந்து இருக்கலாம் என்றும், மேலும் கந்தசாமியின் தம்பியும், இவருடன் தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க வினை சார்ந்த பழனியப்பன் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோற்றதையடுத்து இந்த காரியம் செய்துள்ளதாகவும், தற்போது மறைமுகமாக பல்வேறு சதி வேலைகளில் பஞ்சாயத்திற்கு எதிராகவும், பசுமைக்குடி தன்னார்வலர் அமைப்பிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக செய்து வருவதாகவும், இவர்களிடம் இருந்து பொதுமக்களையும், பசுமைக்குடி தன்னார்வலர் அமைப்பினரையும் காக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தற்போது இடமாறுதல் ஆன நிலையில், குளித்தலை டி.எஸ்.பி கும்மராஜா மற்றும் சிந்தாமணிப்பட்டி போலீஸாரும், மாவட்ட நிர்வாகமும் சீரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது ஊர் பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செங்குத்தான மலையில் டூவிலரில் ஏறிய இளைஞர் …என்ன நடந்தது ? திக் திக் வீடியோ