Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூன்று வேடங்களில் நடிக்கும் கவுண்டமணி… ஒத்த ஓட்டு முத்தையா அப்டேட்!

மூன்று வேடங்களில் நடிக்கும் கவுண்டமணி… ஒத்த ஓட்டு முத்தையா அப்டேட்!
, வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (14:33 IST)
கவுண்டமணி கடைசியாக நடித்த திரைப்படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை திரைப்படம். இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழனிச்சாமி வாத்தியார் என்று ஒரு படத்தில் நடித்து வரும் அவர் இப்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸான நிலையில் பின்னர் படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்துக்காக கவுண்டமணி தயாராகும் காட்சிகளை காட்டியிருந்தனர்.

இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கவுண்டமணி மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் அரசியல்வாதியாகவும், பொதுஜனமாகவும் கவுண்டமணி நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் 68 படத்தில் இணையும் பிரபல 90ஸ் ஹீரோயின்!