Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்ரானின் ஆசை ஹன்சிகா படத்தின் மூலம் நிறைவேறியது!

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (12:54 IST)
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் `மஹா' படத்தின் மூலம் ஹன்சிகாவும், ஜிப்ரானும் புது மைல்கல்லை தொட்டுள்ளனர்.
 



நடிகை ஹன்சிகா தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். 
 
எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
 
அதில் ஒரு போஸ்டரில் சாமியார் தோற்றத்தில் புகைப்பிடிப்பது போன்று ஹன்சிகாவின் தோற்றம் இடம்பெற்றிருந்தது. அதேபோல் மற்றொரு போஸ்டரில் ஹன்சிகா கையில் பல்வேறு முகமூடிகளை வைத்திருப்பது போன்று தோற்றத்தில் இருக்கிறார்.
 
இந்த இரண்டு போஸ்டர்களை பார்க்கும் போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் ஹன்சிகா புது அவதாரம் எடுத்துள்ளது தெரிகிறது.
 
இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைப்பது குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜிப்ரான், இது நான் இசையமைக்கும் 25-வது படம் என்றும், ஹன்சிகாவுக்கு 50-வது படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் ஒரே படத்தின் மூலம் இருவரும் புதிய மைல்கல்லை தொட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments