அவர் மட்டும் ஓகே சொன்னா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிப்பேன் - ஹன்சிகா

திங்கள், 5 நவம்பர் 2018 (12:17 IST)
எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. விஜய், தனுஷ், ஜெயம் ரவி,சிம்பு என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளது.
கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க மாட்டேன், தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பேன் என்று கூறிய  ஹன்சிகாவுக்கு சென்ற வருடம் 18 வாய்ப்புகள் வந்திருந்தும் அதில் 4 படங்களில் மட்டுமே ஒப்புக்கொண்டு நடித்துள்ளார் .
 
இந்நிலையில் திருமணம் பற்றி பேசிய அவர் "எனக்கு 27 வயதாகிறது. என் அம்மா தான் அனைத்தையும் கவனித்து கொள்கிறார். என் திருமணம் பற்றிய முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன். என் அம்மா ஓகே சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்வேன்" என ஹன்சிகா  தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்...!