Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுண்டமணி, செந்தில் இல்லாமலா கரகாட்டக்காரன் 2 ? – கங்கை அமரன் பதில் !

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (17:01 IST)
கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் நடிப்பார்கள் என இயக்குனர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் வணிகா சினிமாவின் கிளாஸிக்குகளில் கரகாட்டக்காரன் படத்துக்கு நீங்காத இடம் உண்டு. 1989 –ல் வெளியான இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் எனப் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் அனைவராலும் விரும்பிக் கேட்கப்பட்டு கொண்டு வருகிறது.
வெளியாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் இயக்குனர் கங்கை அமரன் தீவிரமாக இறங்கியுள்ளார். இது சம்மந்தமாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் இரண்டாம் பாகத்தில் இருப்பார்களா என்ற கேள்விக்கு ‘ அவர்கள் இல்லாமல் எப்படி ?’ எனப் பதிலளித்துள்ளார்.

கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரும் சேர்ந்து நடித்து 15 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கங்கை அமரனின் இந்த பதில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments