பல வித்யாசமான நாட்டுப்புற பாடல்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பெரும் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியர்ககளுக்கு அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடகருக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைத்தது.
சூப்பர் சிங்கர் டைட்டில் கார்டை வென்றதும் செந்திலுக்கு எக்கச்சக்க சினிமா படங்களில் பாடும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்து, செந்தில் - ராஜலட்சுமி தற்போது வளர்ந்து வரும் பாடகர்களில் முக்கிய நாட்டுப்புற பாடகர்களாக வலம் வருகின்றனர். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் கூட இவர்கள் பாடல் பாடியிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி பங்கேற்று நாட்டுப்புற பாடலை பாடி அங்குள்ள மக்களை குஷிப்படுத்தியுள்ளனர். அப்போது இவர்களின் பாடலை கேட்டு உணர்ச்சியை கட்டுப்படுத்தமுடியாமல் அரங்கத்திலேயே அமெரிக்க பெண் ஒருவர் நடனமாடினார். பின்னர் இசை நிகழ்ச்சி முடிந்ததும் அந்த பெண்ணுடன் செந்தில் கணேஷ் தமிழில் கலந்துரையாடி சந்தோஷப்பட்டுள்ளனர். பின்னர் ராஜலக்ஷ்மியும் அந்த பெண்ணுடன் தமிழில் பேசி வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.