Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருவாகிறது கரகாட்டக்காரன் 2 – கங்கை அமரன் தகவல் !

உருவாகிறது கரகாட்டக்காரன் 2 – கங்கை அமரன் தகவல் !
, புதன், 29 மே 2019 (11:46 IST)
30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாக வெளியான கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக இயக்குனர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

தமிழ் வணிகா சினிமாவின் கிளாஸிக்குகளில் கரகாட்டக்காரன் படத்துக்கு நீங்காத இடம் உண்டு. 1989 –ல் வெளியான இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் எனப் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் அனைவராலும் விரும்பிக் கேட்கப்பட்டு கொண்டு வருகிறது.

வெளியாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வேலைகளில் இயக்குனர் கங்கை அமரன் தீவிரமாக இறங்கியுள்ளார். முதல் பாகத்தில் நடித்தவர்கள் அனைவரிடமும் இதில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முற்றியது இந்தியன் 2 பிரச்சனை – ஷங்கருக்கு லைகா நோட்டீஸ் !