Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை: எனை நோக்கி பாயும் தோட்டா தயாரிப்பாளர் அறிக்கை

எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை: எனை நோக்கி பாயும் தோட்டா தயாரிப்பாளர் அறிக்கை
, வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (08:56 IST)
தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இன்று வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் காரணமாக இந்த படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
 
இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மதன், தனுஷ் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
 
செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரும் முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட முடியும் என்ற உறுதியோடு பணிபுரிந்த எங்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாக உணர்ந்து வருகிறோம். மிக விரைவில் அடுத்த சில தினங்களில் வெளியிட மேலும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். 
 
 
இது நீண்ட பெரும் பயணம் என்பதை நாங்கள் அறிவோம். மறுக்கவில்லை! இதில் ஏற்படும் தாமதத்தினால் உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றமும் விரக்தியையும் அதன் காரணமாக நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். உங்கள் கருத்துக்களை கணக்கில் கொண்டே எங்களது பயணமும் அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இலக்கை எட்டும் நிலையில் நாங்கள் வேண்டுவது உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே
 
 
இந்த நிலையில் நீங்கள் பொறுமையுடன் எங்களையும் இந்த திரைப்படத்தையும் ஆதரிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இத்திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்க்கும்போது உங்கள் இத்தனை காத்திருப்பையும் இப்படைப்பு நியாயம் செய்யும் என உளமாற நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வனிதாவை சீக்கிரம் வெளியேத்துங்கப்பா! தாங்க முடியலை....