நடிகர் தனுஷால் தயாரிப்பாளர்கள் யாரும் லாபம் அடையவில்லை என தயாரிப்பாளர் சிலர் போர்கொடி தூக்கியுள்ளனர்.
சமீபத்தில் நடந்த அசுரன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ், இந்த காலத்தில் ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து சம்பளம் வாங்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அது பெரிய வேலையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள் என பேசினார்.
இதற்கு கடும் எதிர்ப்புகளை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், விஜய், அஜித் போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உதவுகிறார்கள். தனுஷால் யாரும் லாபம் அடையவில்லை.
துள்ளுவதோ இளமை தொடங்கி வடசென்னை வரை தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இப்போது சினிமா துறையில் இல்லை என தனுஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் தயாரிப்பாளர் கே.ராஜன், தனுஷை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து உள்ளனர். கதாநாயகன் மற்றும் டைரக்டர் செய்யும் தவறுகளால் படப்பிடிப்பு காலதாமதமாகி வட்டி அதிமாகி கடனாளி ஆகிறார்கள்.
ஆனால் தனுஷ் போன்ற நடிகர்கள் ஆடம்பர கார்களில் வருகிறார்கள். எனவே தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டுவதை தனுஷ் நிறுத்த வேண்டும் என கட்டமாக பேசியுள்ளார்.