Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வனிதாவை சீக்கிரம் வெளியேத்துங்கப்பா! தாங்க முடியலை....

Advertiesment
வனிதாவை சீக்கிரம் வெளியேத்துங்கப்பா! தாங்க முடியலை....
, வியாழன், 5 செப்டம்பர் 2019 (23:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகின்றது என்றால் அதில் 55 நிமிடம் வனிதா தான் பேசுகிறார். வாயைத்திறந்தால் மூடுவதே இல்லை. மற்றவர்களின் கருத்துக்களை கேட்பதில்லை, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை. கேப்டன் என்றால் வானளவு அதிகாரம் இருப்பதாக நினைத்து கொண்டு எல்லோருடைய பர்சனல் விஷயங்களிலும் தலையிடுகிறார் வனிதா
 
 
குறிப்பாக ஷெரினுக்கும் தர்ஷனுக்கும் இடையே ஏதோ ஒன்று இருப்பதாக பிரச்சனையை கிளப்பும் வனிதா, ஷெரின் - தர்ஷன் இருவருமே தங்களுக்கு இடையே எதுவும் இல்லை என்று கூறியபோதிலும் தான் சொன்னதை நியாயப்படுத்த மீண்டும் மீண்டும் வலியுறுத்தி ஷெரினை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளார்.
 
 
இதுநாள் வரை தொடர்ச்சியாக புரமோ வீடியோக்களில் கவின், லாஸ்லியா மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஷெரினை டேமேஜ் ஆக்கும் முயற்சியில் வனிதா தீவிரமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது. வனிதாவின் இந்த நடவடிக்கைகளால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள் அவரை சீக்கிரம் வெளியேத்துங்கப்பா, தாங்க முடியலை என்று புலம்பி தள்ளுகின்றனர். அடுத்த வாரம் நாமினேஷனில் வனிதா சிக்கினால் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களும் வனிதாவை மீண்டும் வெளியேற்ற தயாராக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடும் குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன? கவினுக்கு நெருக்கமானவர் பேட்டி