Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் மில்லர் படத்தோடு இணைந்த லைகா நிறுவனம்… பொங்லலுக்கு டபுள் ரிலீஸ்!

vinoth
சனி, 6 ஜனவரி 2024 (06:59 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது. நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே அவர்கள் வெளியிடும் மிஷன் 1 என்ற படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments