Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் கேப்டன் மில்லர்!

அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் கேப்டன் மில்லர்!
, வியாழன், 4 ஜனவரி 2024 (08:48 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது. நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் அமெரிக்காவில் ஒரு நாள் முன்னதாகவே ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க வாழ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையை காலி பண்ணப் போறாரா?… மதுரையில் பிரம்மாண்டமாக வீடு கட்டும் வடிவேலு!