Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சாரில் சிக்கி கொத்துக்கறி போடப்பட்ட கேப்டன் மில்லர் க்ளைமேக்ஸ் காட்சிகள்!

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:20 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது. நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் சென்சார் நடந்துள்ளது. படத்தில் அதிகளவில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் சென்சார் அதிகாரிகள் முதலில் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம். ஆனால் யு ஏ சான்றிதழைப் படக்குழு கேட்டுள்ளனர். அதனால் அதிக வன்முறைகள் இடம்பெற்றிருந்த கிளைமேக்ஸில் 4 நிமிடக் காட்சிகளை நீக்கினால் யூஏ சான்றிதழ் தருகிறோம் என சொல்ல, அதன் படின் 4 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments