இந்திக்கு செல்ல ஆசைப்படும் விஜய் சேதுபதி… அதுக்கு இந்த படம்தான் துருப்பு சீட்டாம்!

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (07:18 IST)
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம்  ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர். அவர் இயக்கிய பட்லாபூர் மற்றும் அந்தாதூன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதிலும் அந்தாதூன் உலகளவில் புகழ் பெற்ற படமாக மாறியது. இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்போது அவர் விஜய் சேதுபதி மற்றும் காத்ரினா கைஃப் ஆகியோர் நடிப்பில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் பின்  தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படத்தில் தமிழ் பேசும் நபராகவே விஜய் சேதுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவரின் உரையாடல்களை காத்ரினா கைஃபுக்கு மொழி பெயர்த்து சொல்லும் கதாபாத்திரத்தில் நடிகை தீபா வெங்கட் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸை விஜய் சேதுபதி மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். ஏனென்றால் இந்த படம் வெற்றி பெற்றால் அவர் இந்தி சினிமாவில் காலூன்றும் முனைப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் உள்ளிட்ட பல திறமையான தென்னிந்திய நடிகர்களை ஏற்றுக்கொள்ளாத பாலிவுட் சினிமா விஜய் சேதுபதியை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments