Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெர்சலுக்கு விளம்பரம் தேடிய பாஜகவினர்; வைரலாகும் மெர்சல் காட்சி

Advertiesment
மெர்சலுக்கு விளம்பரம் தேடிய பாஜகவினர்; வைரலாகும் மெர்சல் காட்சி
, திங்கள், 23 அக்டோபர் 2017 (15:23 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்திற்கு எதிராக குரல் கொடுத்த பாஜக தலைவர்களை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர், இதற்கு சினிமா பிரபலங்களும் மெர்சலுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
பாஜகவினர் எந்த காட்சியை மக்கள் பார்க்கக் கூடாது என்று நினைத்து கண்டனம் தெரிவித்ததோ அந்த காட்சி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகிவிட்டது. மெர்சல் படத்தில் விஜய் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா, அரசு மருத்துவமனைகளின்  அவல நிலை பற்றி விஜய் படத்தில் பேசியதற்கு, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த காட்சிகளை நீக்குமாறு பாஜக தலைவர்கள் அழுத்தம் கொடுத்தனர்.
 
இந்த அளவுக்கு மெர்சல் படத்தை எதிர்க்கிறது என்றால் அதில் அப்படி என்ன இருக்கிறது என்ற ஆவலில் மக்கள்  தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள். இதனால் மெர்சலுக்கு இப்படி தேசிய அளவில் சூப்பராக விளம்பரம் தேடித் தந்த பாஜகவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தலைவராக மாற வேண்டும் - எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி