Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெர்சல் குழுவுடன் நடிகர் கமல் வைரலாகும் புகைப்படம்

மெர்சல் குழுவுடன் நடிகர் கமல் வைரலாகும் புகைப்படம்
, திங்கள், 23 அக்டோபர் 2017 (10:28 IST)
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாஜகவினரின் எதிர்ப்புகளுக்கிடையே இன்றுவரை எல்லா தியேட்டர்களும்  ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்  கொண்டிருக்கின்றன.

 
பல்வேறு பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டி, தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல் ஹாஸனும் மெர்சல் படம் பார்த்துவிட்டு, அந்த  படக்குழுவினரோடு எடுத்துக் கொண்ட படங்கள் வெளிவந்துள்ளன.

webdunia
 
 
இந்த நிலையில் நடிகர் கமல், விஜய் மற்றும் அட்லீயோடு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் பின்னணியில் கறுப்பு  வெள்ளையில் அபூர்வ சகோதரர்கள் டிஜிட்டல் பேனர் காட்சி அளித்தது. இதனால் மெர்சல் குழுவுக்கு மெர்சல் ஆகிவிட்டதாக  கூறப்படுகிறது. இந்த போஸ்டரைப் பார்த்து. வேறு வழியில்லாமல், அந்த போஸ்டர் பின்னணியில் படமெடுத்துக் கொண்டுள்ளனர். மெர்சல் படத்தின் கதை அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம், குடியிருந்த கோயில் போன்ற படங்களிலிருந்து  உருவப்பட்டது என்பதை படம் வெளியாவதற்கு முன்பிருந்தே பலரும் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பொதுவாக கமலுடன் அவர் அலுவலகத்தில் படமெடுத்துக் கொள்ளும்போது அதன் பின்னணியில் அவர் அப்போதைக்கு நடித்துக் கொண்டிருக்கும் பட போஸ்டர்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் கமல் மெர்சல் குழுவுடன்  எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் பின்னணி, பாராட்டா? அல்லது கலாய்பா? என புரியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சலின் சென்னை ஓப்பனிங் வசூல் ரூ.7 கோடி: தமிழிசைக்கு நன்றி தெரிவித்த ரசிகர்கள்