துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

vinoth
திங்கள், 28 ஜூலை 2025 (10:06 IST)
தர்பார் படத்தின் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இடைவேளை எடுத்துக் கொண்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.  அதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து இயக்கிய ‘சிக்கந்தர்’ திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து அவர் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் ருக்மினி வசந்த், வித்யுத் ஜமால் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள ஏ ஆர் முருகதாஸ் “மதராஸி படம் கஜினி போன்ற திரைக்கதையும், துப்பாக்கி படம் போன்ற ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கவேண்டும் என்று மனதில் வைத்து எழுதப்பட்டது. இப்போது படம் பார்க்கும் போது அது உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜி வி பிரகாஷின் நூறாவது படத்தில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா!

அஜித்குமார் ரேஸிங் அணியோடு கைகோர்த்த ரிலையன்ஸின் ‘கேம்பா’ கோலா!

புது லுக்கில் மாஸ் காட்டும் தனுஷ்.. பாலிவுட் மோகம்.. மனுஷன் செம்மையா இருக்காரே

காந்தாராவா மாறிய சூர்யா.. ‘கருப்பு’ படத்தில் இப்படியொரு சீனா? தேறுமா?

தளபதி கச்சேரி பாடலுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய்க்கு அவ்வளவுதானா மவுசு?

அடுத்த கட்டுரையில்
Show comments