மதுரைப் பின்னணியில் கேங்ஸ்டர் கதை… அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ்!

vinoth
திங்கள், 28 ஜூலை 2025 (10:00 IST)
தமிழ் சினிமாவில் இன்று மோஸ்ட் வாண்டட் இயக்குனராக அனைத்து ஹீரோக்களாலும், தயாரிப்பு நிறுவனங்களாலும் விரும்பப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். அதற்குக் காரணம் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து வருகிறார்.

மாநகரம் எனும் சிறு பட்ஜெட் படத்தில் தொடங்கிய அவரது பயணம் தற்போது கூலி படத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அடுத்து அவர் அமீர்கானை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதற்கிடையில் லோகேஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் இதை உறுதி செய்துள்ள லோகேஷ் “அருண் மாதேஸ்வரன் என்னிடம் நடிக்க ஆசை இருக்கா என்று கேட்டார். நான் பார்க்கலாம் என்று சொல்லிவைத்திருந்தேன். அவர் இயக்கவிருந்த இளையராஜா பயோபிக் படம் தாமதம் ஆனதால் இப்போது அவர் இயக்கவுள்ள ஒரு கேங்ஸ்டர் கதையில் நடிக்கவுள்ளேன். கைதி 2 படம் தொடங்க இன்னும் 8 மாதங்கள் உள்ளன. 80 நாட்களில் இந்த படத்தை முடித்துவிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மூன்றாவது திருமணமும் முறிவு: 'சிங்கிள்' என அறிவித்த பிரபல நடிகை..!

இவர் கேட்டதுக்கு சுத்த விட்டு அடிச்சுருப்பாரு.. இளையராஜாவுக்கும் பாரதிகண்ணனுக்கும் இடையே நடந்த சண்டை

தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட்!. நடிகை மான்யா ஆனந்த் பகீர்!..

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments