Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுஷ்கா ஷர்மா கர்ப்பமா? அவரே கூறிய உண்மை பதில்!

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (18:46 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும்  பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 11ந் தேதி திருமணம் நடைபெற்றது. விரைவில் இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவு பெற உள்ளது


 
சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்த அனுஷ்கா சர்மா தனது வயிற்றை மறைத்தபடி சென்றார். மேலும் கேமரா மேன்களையும் அருகில் நெருங்க விடாதபடி பாதுகாவலர்களையும் உடன் அழைத்து வந்திருந்தார் அனுஷ்கா சர்மா. அத்துடன் ரசிகர்கள் யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுஷ்கா மறுத்துவிட்டார். வழக்கமாக விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களுடன் ஆர்வத்துடன் அனுஷ்கா செல்பி எடுத்துக் கொள்வது வழக்கம்.
 
ஆனால், திடீரென ரசிகர்களை கண்டு ஒதுங்குவது, கேமரா மேன்களை அருகில் நெருங்க விடாமல் இருப்பது இதற்கெல்லாம் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தகவல்கள் தீப்பொறியாக பறந்தது . 
 
இந்நிலையில் மீண்டும் ஒரு விழாவில் பங்கேற்ற அனுஷ்காவை பார்த்த பலரும், நீங்கள் கர்ப்பமா என கேள்வி கேட்டு நலம் விசாரித்துள்ளனர்.
 
அதற்கு அனுஷ்கா சட்டென கோபமாகி அந்த நிகழ்ச்சிக்கு வந்த மீடியாக்களிடம் பேசியுள்ளார். அதாவது ' நீங்க என்ன வேணும்னாலும் எழுதலாம். அது படித்து விட்டு நான் சிறிது விட்டு போய் விடுவேன். அனால் சில நாட்களிலேயே நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்கு தெரிந்துவிடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள். என மிகுந்த ஆவேசத்தோடு தெரிவித்துள்ளார் .
 
இதற்கு முன்பும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது, ஒரு முறை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. சுமார் ஒரு வாரம் கழித்து அது வதந்தி என்று அனுஷ்கா சர்மா விளக்கம் அளித்தார். 
 
மேலும் தான் தாய் ஆகும் தகவலை தனது கணவருடன் இணைந்து வெளிப்படையாக தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் இவர் தற்போது கர்ப்பமாக இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments