இந்தியா இதுவரை 11 முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது.
இந்தியா சுனில் கவாஸ்கர், கபில்தேவ், மன்சூர் அலிகான் பட்டோடி, அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட், தோனி எனப் பலத் திறமையான கேப்டன்களின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
ஆனாலும் இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு அழியாத கலங்கப் பெயர் இதுவரை இருந்து வருகிறது. அது என்னெவென்றால் ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலிய மண்ணில் வீழ்த்தி இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை என்பது.
டெஸ்ட் போட்டிகள் ஆரம்பித்த சில காலங்களுக்குப் பிறகு இந்தியா முதன் முதலாக 1955 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போதிலிருந்து வேறுவேறு காலகட்டங்களில் 11 முறை சுற்றுப்பயணம் சென்று டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள போதும் ஒரு முறைக் கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
அந்த அவப்பெயரை இந்த முறை கோஹ்லி தலைமையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா அணி நீக்கி சாதனைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் உருவாகியுள்ளது. அதற்கேற்றாற்போல ஆஸ்திரேலிய அணியும் அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாமல் தற்போது தடுமாறி வருகிறது.
இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டர் டீன் ஜோன்ஸ் ‘ இந்தியாபுக்கு இந்த முறை தொடரைக் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அப்படி இந்த முறை வெற்றிபெறா விட்டால் இனி எப்போதுமே வெற்றி பெற முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.