Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்திரேலியா லெவன் அபாரம்- டிராவில் முடிந்த பயிற்சி ஆட்டம்!

ஆஸ்திரேலியா லெவன் அபாரம்- டிராவில் முடிந்த பயிற்சி ஆட்டம்!
, ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (07:56 IST)

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியா லெவன் அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தை சமன் செய்துள்ளது.


 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் அதற்கு முன்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கிடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கியது.

முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதும் பாதிக்கப்பட இரண்டாம் நாளில் தனது ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. விராட் கோஹ்லி, ஹனுமா விஹார், பிரித்வி ஷா ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா 358 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய லெவன் அபாரமாக விளையாடி 544 ரன்கள் குவித்தது. அந்த அணியின் நீல்சன் அபாரமாக விளையாடி 100 ரன்களை குவித்தார். மற்றொரு வீரரான ஹார்டி 86 ரன்கள் சேர்த்தார்.

இந்திய பவுலர்கள் அவர்களின் விக்கெட்டை வீழ்த்த கடுமையாகப் போராடினர். இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா சிறப்பானத் தொடக்கத்தை அமைத்தது. இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் 62 ரன்களும், மற்றொரு வீரரன முரளி விஜய் அதிரடியாக விளையாடி 129 ரன்களும் சேர்த்தனர்.

இந்திய அணி 211 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்திருந்த போது போட்டி டிராவில் முடிந்தததாக அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா லெவன் அணியின் கைய்யே ஓங்கி இருந்தது எனபது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

11 முறை தோல்வி – பழிதீர்க்குமா கோலி & கோ