Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதைக்கு நடிப்புதான்… கல்யாணம் பற்றி பேச்சே இல்லை – அனுஷ்கா திட்டவட்டம் !

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (16:15 IST)
நீண்ட இடைவெளிக்குப் பின் நிசப்தம் என்ற படத்தில் நடித்துள்ள அனுஷ்கா இப்போதைக்கு திருமணம் இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் இவர் நடிப்பில் வெளியான, அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது, முன்னனி இயக்குநர்களின் படங்களில் அவர் நடித்து வருகிறார்.பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். 

இதையடுத்து பிரபாஸுடன் காதலில் இருப்பதாக தொடர்ந்து கிசு கிசுக்கப்பட்டு வந்த அனுஷ்கா இது வெறும் வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரருடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார். இதனால் மிகுந்த கோபத்திற்கு ஆளான அனுஷ்கா.. இன்னும் எத்தனை பெரும் திருமணம் செய்து வைப்பீர்கள் என கேட்டு கோபத்துடன் காதல் எதுவும் இல்லை எல்லாம் வதந்தி என கூறினார். 

இதையடுத்து அவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நிசப்தம் என்ற படம் வெளிவர உள்ள நிலையில் அளித்த பேட்டியில் திருமணம் இப்போதைக்கு இல்லை என்றும் அடுத்தடுத்து இரு படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அவர் படங்களுக்கு இசையமைத்தால் இனம்புரியாத சந்தோஷம்… இளையராஜா நெகிழ்ச்சி!

மாரி செல்வராஜின் ‘பைசன்- காளமாடன்’ ஷூட்டிங் நிறைவு!

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

அடுத்த கட்டுரையில்
Show comments