மர்மங்கள் நிறைத்த "சைலன்ஸ்" விறு விறுப்பான திகில் ட்ரைலர் இதோ!

வெள்ளி, 6 மார்ச் 2020 (14:10 IST)
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டி  தற்போது இயக்குனர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகிவரும் “நிசப்தம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே , அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு , ஆங்கிலம் என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம் விறு விறுப்பான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது வாய் பேசமுடியாமல், காது கேட்காமல் பேய்களிடம் மாட்டிக்கொள்ளும் அனுஷ்காவை அஞ்சலி காப்பாற்றி உண்மை என்ன என்பதை கணடறிகிறார்.

பின்னர் இதெல்லாம் பேய்களால் நடக்கிறது என்பதை அறிந்துகொண்ட அஞ்சலி அதன் மீது நம்பிக்கையில்லாமல் அனுஷ்காவுக்கு யாரோ உதவுவதாக நினைக்கிறார். பின்னர் துரித விசாரணை மேற்கொண்டு மாதவன் யார் என்பதையும், இந்த கொலை அத்தனையும் அனுஷ்கா தான் செய்தாரா என பல கோணத்தில் விசாரணை நடத்துகிறார் அஞ்சலி.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் என்ன வளைவுடா.... ரம்யா பாண்டியனின் ஹாட் அழகை வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!