Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50 ஆண்டுகால பழமையான தியேட்டர் – மூடப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

50  ஆண்டுகால பழமையான தியேட்டர் – மூடப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி!
, திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:17 IST)
வடசென்னையின் அடையாளமாக விளங்கிய அகஸ்தியா திரையரங்கம் இப்போது மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தண்டையார் பேட்டையால் 1967 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது அகஸ்தியா தியேட்டர். அன்று முதல் இன்று வரை பல வெள்ளி விழா படங்களைக் கண்ட அந்த தியேட்டர் இப்போது மூடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தியேட்டரை ஒரு முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் ரஜினி படங்களை திரையிடுவதைக் காட்டிலும் அதிகமாக கமல் படங்களை திரையிடுவார்கள். அதனால் கமல் ரசிகர்களின் ஆதரவு பெற்ற திரையரங்கமாக அகஸ்தியா இருந்தது.

இப்போது லாக்டவுன் காரணமாக 5 மாத காலமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ள நிலையில் நேற்று வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லதா மங்கேஷ்கர் வீட்டு முன்னர் கொரோனா தடுப்பு – பின்னணி என்ன?