Publish Date: Mon, 31 Aug 2020 (11:54 IST)
Updated Date: Mon, 31 Aug 2020 (12:06 IST)
இந்திய முன்னாள் ஜனாதிபதியான பிரனாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான பிரனாப் முகர்ஜி, மூளையில் உள்ள ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. அதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் உதவியுடனேயே இருந்தார்.
தற்போது வரை அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது சிறுநீரக செயல்பாடுகள் மேலும் குறைந்துள்ளதாகவும் தொடர் கோமா நிலையிலேயே அவர் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்றைய அறிவிப்பில் பிரனாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளதாகவும், அவர் தொடர்ந்து வெண்ட்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.