Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணை அதிகாரி முன் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை - காவல்துறை

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:14 IST)
ஜாமீன் நிபந்தனையாக விசாரணை அதிகாரி முன் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நடிகை மீரா மிதுன் பட்டியலின மக்களை பற்றி தவறாக பேசிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தகவல் வெளியானது. இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திடீரென மீராமிதுன் தலைமறைவான நிலையில் அவரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். பின்னர் கேரளாவில் உள்ள ஆலப்புழா என்ற இடத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மீராமிதுன் தங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 22 ஆம் தேதி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் விடுதலை ஆனார்.

இந்நிலையில் ஜாமீன் நிபந்தனையாக விசாரணை அதிகாரி முன் நடிகை மீரா மிதுன் ஆஜராகவில்லை என் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு நீதிமன்றம், நிபந்தனையை நிறைவேற்றவில்லை நடிகை மீராமிதுனுக்கான ஜாமீனை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யலாம் என சென்னை நீதிமன்றம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments