Publish Date: Fri, 17 Dec 2021 (16:59 IST)
Updated Date: Fri, 17 Dec 2021 (17:00 IST)
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்து சென்று கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலை வாங்கி தருவதாக ரூ 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இruந்த நிலையில் நான்கு பேரின் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த முன் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்ய 2 தனிப்படைகள் திருச்சி விரைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.