Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Advertiesment
மலையாள நடிகை
, வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:06 IST)
பிரபல மலையாள நடிகை அபர்ணா என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மலையாள திரையுலைகள் குணசத்திர நடிகையாக இருந்தவர் அபர்ணா நாயர். தனியார் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் அடைந்த இவர் மலையாளத்தில் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் நிகழ்ந்த போது அதே வீட்டில் அவரது அம்மா தங்கை இருந்துள்ளனர். 
 
அபர்ணா நாயர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அபர்ணாவுக்கு  சஞ்சீத் என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்தானத்தின் அடுத்த படத்தின் ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பு நிறுவனம்!