Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவுக்கு வாக்களித்த விரலை வெட்டி அமைச்சருக்கு பரிசாக அனுப்பிய நபர்!

Advertiesment
dhanajeyan
, சனி, 19 ஆகஸ்ட் 2023 (13:48 IST)
மஹாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் வசித்து வரும்   தனஞ்செய் தன் ஒரு விரலை வெட்டி  மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மஹாராஷ்டிரம் மாநிலத்தில்  முதல்வர் ஏக்நத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா( எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள மும்பை உல்ஹாஸ் நகரில்  நந்தகுமார் என்பவர் தன் குடும்பத்துடன்  முகாம் எண் 4. உள்ள அஷாலேபாடா பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

 நந்தகுமார் தற்கொலை செய்து கொள்ளும்புன், தன் செல்போனில், சங்ராம், நிகால்ஜே, ரஞ்சித் சிங், நாயக், நிம்பல்கர், வழக்கறிஞர் தியானேஷ்வர் தேஷ்முக்,  நிதின் தேஷ்முக் ஆகியோரால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன் அண்ணன், அண்ணி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகிறார்.

ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த  நந்தகுமாரின் சகோதரர் தனஞ்செய், தனது ஒரு விரலை வெட்டி அதை வீடியோ எடுத்து,  மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், தனஞ்செய் ஒரு வீடியோவில்,  ‘ பாஜக அரசுக்கு வாக்களித்த  விரலை வெட்டி உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்ப உள்ளதாக ‘தெரிவித்துள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஆங்கிலத்தில் சட்டம் இயற்றிவிட்டு பெயரை மட்டும் இந்தியில் வைக்கிறார்கள்’’ -பா.சிதம்பரம்