Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதனைப் பெண்ணை சந்தித்த நடிகர் அஜித்

Advertiesment
நடிகர் அஜித்குமார்
, திங்கள், 20 செப்டம்பர் 2021 (19:32 IST)
மோட்டார் சைக்கிளில் தனியாக உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம்பெண் சாதனையாளரைச் சந்தித்து, அவரது அனுபவத்தை நடிகர் அஜித்குமார்  கேட்டறிந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்தது. இதையடுத்து, நடிகர் அஜித்குமார், தனது பைக்கில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டார்.

இது உலகளவில் பெரும் பரலவாகப் பேசப்பட்டது. அவரது ரசிகர்களும் இதனால் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில்,  மோட்டார் சைக்கிளில் தனியாக 64 உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம்பெண் சாதனையாளரைச் சந்தித்து, அவரது அனுபவத்தை நடிகர் அஜித்குமார்  கேட்டறிந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!