Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் அஜித்குமாரின் ’61 வது படம்’ ..முக்கிய அப்டேட்..

நடிகர் அஜித்குமாரின் ’61 வது படம்’ ..முக்கிய அப்டேட்..
, சனி, 31 ஜூலை 2021 (16:10 IST)
தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது அடுத்த படம் குறித்த படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில்  வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி சாதனை படைத்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் 61 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை மூன்றாம் முறையாக அஜித்தை வைத்து ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், ஆனால் விஸ்வாசம் படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் ஏற்கனவே தனுஷின் மாறன்,. ஹிப் ஹாப் ஆதியின் சிவக்குமாரின் சபதம் உள்ளிட்ட படங்களை தயாரித்துவரும் நிலையில், அஜித்தின் 61 வது படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்க உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவுக்காக காத்திருக்கும் தூங்கா நகரம் இயக்குனர்!