Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்-ன் '’வலிமை’; பட ரிலீஸ் தேதி தேதி....முக்கிய அறிவிப்பு

அஜித்-ன் '’வலிமை’; பட ரிலீஸ் தேதி தேதி....முக்கிய அறிவிப்பு
, வியாழன், 29 ஜூலை 2021 (16:15 IST)
நடிகர் அஜித்குமார் நடித்துவரும் வலிமை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த 11 ஆம் தேதி வெளியானது.

இரண்டு வருடம் கழித்து அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில் வலிமை பட போஸ்டர் பிரமாண்டமாக இருந்தது.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது. இப்படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் இயக்குநர் சமீபத்தில் தெரிவித்தார். அதேபோல், புக் மை ஷோவில் இப்படத்தின் அதிகளவில் புக் செய்துள்ளனர்.

இந்நிலையில் அஜித்-ன் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் 5 நாட்களில்  படப்பிடிப்பு முடிந்தபின்னர்  அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வலிமை படக்குழுவினர் வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்ததும் அடுத்த போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து, அடுத்த சாதனை நிகழ்த்த காத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் செஃப் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!