Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கங்கனாவுக்கு ரொம்ப திமிரு: "தலைவி" ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தம்பி ராமையா பேச்சு!

Advertiesment
கங்கனாவுக்கு ரொம்ப திமிரு:
, செவ்வாய், 23 மார்ச் 2021 (19:42 IST)
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர்  வெளியீடு, இன்று  படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.  
 
இவ்விழாவில் பேசிய நடிகர் தம்பி ராமையா கூறியதாவது...
 
எல்லா படங்களும் போல் இந்த படம் நூற்றில் ஒன்றல்ல, நூற்றாண்டுகளில் ஒன்று. 1965-1980 காலங்களில் ஜெயலலிதா அம்மையாரை தவிர்த்து தென்னிந்திய படங்களை பார்க்க இயலாது. அதுபோல் 1982-ல் ஜெயலலிதா அவர்கள், தன்னை அதிமுக-வில் இணைத்து கொண்டபிறகு. 1982-2016 வரை இந்திய அரசியலை அவரை தள்ளிவைத்து பார்க்க இயலாது.  
 
சினிமா வாழ்வில், அரசியல் வாழ்விலும் பெரும் ஜாம்பவானாக இருந்த ஜெயலலிதா அம்மையார் பற்றிய படம்..  இந்திராகாந்தி அம்மையார், மம்தா பேனர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா அம்மையார் இவர்கள் நான்கு பேரையும் கலந்தார் போல் கங்கனா ரனாவத் உள்ளார். திறமை இருக்கும் இடத்தில் திமிரு வரும், கர்வ திறமை கொண்ட தேவதை, அவருடன் நடிக்கும்போது அதை நான் பார்த்தேன், அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். 
 
தியாகராஜா பாகவதர், எம் ஜி ஆர், கமல், அஜித்குமார், இவர்கள் அனைவரும் அழகின் உச்சம், இவர்கள் அனைவரின் கலவையாக அரவித் சாமி உள்ளார்.  எம்ஜிஆர் கதாபாத்திரத்திற்கு இவர் தவிர யாரும் பொருத்தமாக இல்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் தனுஷின் 'கர்ணன் 'பட டீசர் ரிலீஸ்..இணையதளத்தில் வைரல்