Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விராத் கோஹ்லி உள்பட பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: 2வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி

விராத் கோஹ்லி உள்பட பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: 2வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி
, திங்கள், 9 டிசம்பர் 2019 (06:12 IST)
விராத் கோலி உள்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும், பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் தவறியதாலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தது
 
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா 15 ரன்களிலும் கேஎல் ராகுல் 11 ரன்களிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து களமிறங்கிய டுபே அதிரடியாக விளையாடி 54 ரன்கள் எடுத்தாலும், அதன் பின் விளையாடிய கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் விக்கெட்டுக்களை சீக்கிரமே பறிகொடுத்தனர். ரிஷப் பண்ட் மட்டுமே கடைசிவரை நிலைத்து ஆடி 33 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டியதி. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 67 ரன்கள் எடுத்தது அந்த அணியின் வெற்றிக்கு பேருதவியாக இருந்தது. லீவிஸ் 40 ரன்களும் ஹெட்மையர் 23 ரன்களும், பூரன் 38 ரன்கள் எடுத்ததால் மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
 
நேற்றைய பந்துவீச்சில் முக்கிய பந்துவீச்சாளர்களான புவனேஷ் குமார், தீபக் சஹார், சஹால், ஆகியோர் விக்கெட்டுக்களை எதையும் வீழ்த்தவில்லை. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார் 
 
நேற்றைய போட்டியில் சிம்மன்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்த வெற்றியை அடுத்து இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி வரும் 11ம் தேதி மும்பையில் நடைபெறும் என்பதும், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்த தொடரை வெல்லும் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2வது டி20: டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அதிரடி முடிவு