நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்கள் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தபோதிலும் ஒரு சில அரசியல் விமர்சகர்கள் மட்டும் சரியாக, கமல் ரஜினி இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்று கூறி வருகின்றனர்
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிவித்தது. கமல்ஹாசன் மற்றும் அவருடைய கட்சித் தொண்டர்களுக்கு ஏமாற்றமாக இருந்ததாக கூறப்பட்டது
இந்த நிலையில் சற்று முன்னர் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை என கமல் ஹாசன் அறிவித்தார். இரு கட்சிகள் எழுதி வைக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரமும் வேண்டாம் என்றும், 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதை தனது நோக்கம் என்றும் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்
ரஜினியின் மக்கள் மன்றம் ஆதரவு கொடுத்து இருந்தால் கமல்ஹாசன் கட்சி கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு இருக்குமென்றும், ரஜினி ஆதரவு கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் தான் கமல் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது