Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் போட்டு பிராக்டிஸ் செய்தேன் – தன்னையே கேலி செய்த விரோட் கோஹ்லி !

Webdunia
புதன், 1 மே 2019 (10:48 IST)
தொடர் டாஸ் தோல்விகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆர் சி பி கேப்டன் கோஹ்லி அதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இந்தியாவை சிறப்பாக செயல்படவைத்து வரும் கோஹ்லி பெங்களூர் அணிக்கு இதுவரை சிறப்பாக எதுவும் செய்ததில்லை.

அதிலும் இந்த் ஆண்டு விராட் கோஹ்லி தலைமையிலான அணி மிகவும் மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. அதற்கு டாஸ் தோல்வியும் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் 10 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார். இது குறித்து விராட் கோஹ்லியிடம் கேள்வி எழுப்பியபோது ‘ போட்டி தொடங்குவதற்கு முன்னர் டாஸ் போட்டு பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இம்முறையும் டாஸ் தோற்று விட்டேன். ஆனால் சிறப்பாக பேட் செய்தால் டாஸ் தோல்வியையும் முறியடித்து வெல்லலாம். கடைசி சில போட்டிகளை வெற்றியாக முடிக்க விரும்புகிறோம்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments