Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்டன் கிரிகெட்டர் ஆஃப் த இயர் – 4 ஆவது முறையாகப் பெற்று கோஹ்லி சாதனை !

விஸ்டன் கிரிகெட்டர் ஆஃப் த இயர் –  4 ஆவது முறையாகப் பெற்று கோஹ்லி சாதனை !
, புதன், 10 ஏப்ரல் 2019 (16:51 IST)
சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருதை இந்த ஆண்டும் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோஹ்லி பெற்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான விஸ்டன் கிரிக்கெட்டர் ஆஃப் த இயர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலியோடு சேர்த்து மொத்த 5 சிறந்த வீரர்களைத் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் தேர்வு செய்துள்ளது. அதில் விராட் கோலி, இங்கிலாந்து வீராங்கனை டாமே பியாமவுன்ட், இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கரண், ரோரி பர்ன்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விருதை கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து விராட் கோஹ்லி தொடர்ச்சியாகப் பெற்று வருகிறார். இந்த விருதை 3 முறைகளுக்கு மேல் பெற்ற முதல் இந்திய வீரர் கோஹ்லி ஆவார். 3 முறைகளுக்கு மேல் டான் பிராட்மேன் மற்றும் ஜேக் ஹாப்ஸ் ஆகியோர் மட்டுமே பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டில் கோஹ்லி அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 2735 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்கள் அடங்கும். டி 20 வீரருக்கான விருது ரஷீத் கான்க்கும் மகளிருக்கான விருது இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரையில் படுத்து உறங்கிய ’தோனி , சாக்ஸி ' : 'வைரல் போட்டோ’ ’மில்லியன் லைக்ஸ்’