இந்திய ஸ்டாண்ட்பை அணி அறிவிப்பு –அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு!

புதன், 17 ஏப்ரல் 2019 (18:51 IST)
உலகக்கோப்பை போட்டிக்கு செல்லும் இந்திய அணிக்கு ஸ்டாண்ட்பை அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். இதையடுத்து பிசிசிஐ இரண்டு நாட்களுக்கு முன்னர் 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது.

விராட் கோலி – கேப்டன், ரோகித் ஷர்மா - துணை கேப்டன்  ,எம்.எஸ்.தோனி , ஷிகர் தவான் ,ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ,ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ,ஜஸ்ப்ரித் பும்ரா ,முகமது ஷமி, கேதர் சாதவ் ,தினேஷ் கார்த்திக் ,விஜய் சங்கர் ,யுஸ்வேந்த்ரா சஹால் ,குல்தீப் யாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்ல இருக்கிறது.

இந்த அணியில் அம்பாத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் போன்றவர்கள் இடம்பெறாதது அனைவருக்கு அதிர்ச்சியளித்தது. அதேப் போல பெரிதாக அனுபவம் இல்லாத விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது. தான் தேர்வு செய்யப்படாதது குறித்து அம்பாத்தி ராயுடு அதிருப்தியை டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்திய அணிக்கான ஸ்டான்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் யாராவது காயங்களால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவானால் அவர்களுக்குப் பதிலாக இவர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள். அதேப் போல ஆவேஷ் கான், கலீல் அகமெட், தீபக் சாஹர் ஆகியோர் இந்திய அணியின் வலைபவுலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உலகக் கோப்பை: கபில்தேவ், தோனி வரிசையில் கோலி இடம்பிடிப்பாரா?