Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

இதனால்தான் அஸ்வின், ஜடேஜே ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை - மழுப்பும் தேர்வுக்குழு தலைவர்

Advertiesment
அஸ்வின்
, புதன், 27 டிசம்பர் 2017 (19:09 IST)
ஒருநாள் போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவே அஸ்வின், ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

 
டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஒருநாள் போட்டியில் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
இருவரும் இந்திய அணிக்காக நிறைய செய்துள்ளனர். அவரகளுக்காக தேர்வு கதவு எப்போதும் திறந்தே இருக்கும். அவர்கள் நிச்சயமாக மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க மட்டுமே அவர்களே நீக்கப்பட்டுள்ளனர். வேறு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
 
அனுபவம் உள்ள் வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஒருநாள் இந்திய அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்திய பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. எந்த காரணமும் அவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது. 
 
இந்நிலையில் தேர்வுக்குழு தலைவர் கூறிய மழுப்பியே விளக்கம் அளித்துள்ளார். நல்ல பார்மில் இருந்தவர் திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்டது பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 நாள் பகலிரவு டெஸ்ட் போட்டி: ஜிம்பாவே திணறல்